• Sep 03 2026

சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா

Aathira / Sep 3rd 2026, 11:18 am
image

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன் தலைமை தாங்கினார்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க பண்பாட்டு ஊர்வலத்துடன் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கலச் சுடர்கள் ஏற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நாடகச் சக்கரவர்த்தி பரஞ்சோதி பரராஜசிங்கம் (பப்பா) அரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதற்கட்டமாக சி.கிருஷ்ணாகரன் குழுவினரின் வாத்தியச் சங்கமம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடமராட்சி வடக்கு கலாசார பேரவை உறுப்பினர் கு.ரவீந்திரன் அரங்கத்திறப்புரையை நிகழ்த்தினார்.

இதையடுத்து நெடியகாடு பரதசுரபி கலைமன்றத்தின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வடமராட்சி வடக்கு உதவி பிரதேச செயலாளர் ம.ப.தயானந்தன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து அபிநய கலாகேத்ரா நடனாலயத்தின் சிவதாண்டவ கௌத்துவம் இடம்பெற்றது.

தொடர்ந்து நிகழ்வின் தலைவரும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளருமான ந.திருலிங்கநாதன் தலைமையுரையை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து பொலிகை இசைக்கோயில் வெளியீட்டகத்தின் உடுக்கிசைப் பாடல் இடம்பெற்றது.

பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஷ்ணானந்தன், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கவிஞரும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளருமான இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கருத்துரைகளை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஞானசம்பந்தர் கலைமன்றத்தின் சக்திக்கூத்து, கற்கோவளம் வேணுகானசபா கலைமன்றத்தின் கூத்திசைப் பாடல்கள் ஆகியன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கண்ணதாசன் குழுவினரின் ‘சத்தியவான் சாவித்திரி’ இசை நாடகம் இடம்பெற்றது.

இதன்போது தம்பையா ஐயர் கண்ணதாசன், காத்தமுத்து ஞானவேல், இராசேந்திரம் மதியழகன் ஆகியோருக்கு கலைப்பருதி விருதுகளும், மதியழகன் லக்ஸ்மன், திருமதி நித்தியா சுவர்மன் ஆகியோருக்கு இளங்கலைஞர் விருதுகளும், திருமதி செந்தூரன் அருந்ததி அவர்களுக்கு இளங்கலைப்பருதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மூத்த கலைஞர்களான வல்வை ந.அனந்தராஷ், வே.கார்த்திகேசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், வடமராட்சி வடக்கு பிரதேச கலாசார பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலைஞர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன் தலைமை தாங்கினார்.விழாவின் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க பண்பாட்டு ஊர்வலத்துடன் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கலச் சுடர்கள் ஏற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.நாடகச் சக்கரவர்த்தி பரஞ்சோதி பரராஜசிங்கம் (பப்பா) அரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.முதற்கட்டமாக சி.கிருஷ்ணாகரன் குழுவினரின் வாத்தியச் சங்கமம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடமராட்சி வடக்கு கலாசார பேரவை உறுப்பினர் கு.ரவீந்திரன் அரங்கத்திறப்புரையை நிகழ்த்தினார்.இதையடுத்து நெடியகாடு பரதசுரபி கலைமன்றத்தின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வடமராட்சி வடக்கு உதவி பிரதேச செயலாளர் ம.ப.தயானந்தன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து அபிநய கலாகேத்ரா நடனாலயத்தின் சிவதாண்டவ கௌத்துவம் இடம்பெற்றது.தொடர்ந்து நிகழ்வின் தலைவரும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளருமான ந.திருலிங்கநாதன் தலைமையுரையை நிகழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து பொலிகை இசைக்கோயில் வெளியீட்டகத்தின் உடுக்கிசைப் பாடல் இடம்பெற்றது.பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஷ்ணானந்தன், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கவிஞரும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளருமான இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கருத்துரைகளை நிகழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து ஞானசம்பந்தர் கலைமன்றத்தின் சக்திக்கூத்து, கற்கோவளம் வேணுகானசபா கலைமன்றத்தின் கூத்திசைப் பாடல்கள் ஆகியன இடம்பெற்றன.அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து கண்ணதாசன் குழுவினரின் ‘சத்தியவான் சாவித்திரி’ இசை நாடகம் இடம்பெற்றது.இதன்போது தம்பையா ஐயர் கண்ணதாசன், காத்தமுத்து ஞானவேல், இராசேந்திரம் மதியழகன் ஆகியோருக்கு கலைப்பருதி விருதுகளும், மதியழகன் லக்ஸ்மன், திருமதி நித்தியா சுவர்மன் ஆகியோருக்கு இளங்கலைஞர் விருதுகளும், திருமதி செந்தூரன் அருந்ததி அவர்களுக்கு இளங்கலைப்பருதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில் மூத்த கலைஞர்களான வல்வை ந.அனந்தராஷ், வே.கார்த்திகேசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மேலும், வடமராட்சி வடக்கு பிரதேச கலாசார பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலைஞர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement