கண்டி - நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இதன் காரணமாக அவ் வீதியில் செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் தோட்ட தொழிலாளர்கள் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அடிக்கடி இந்த வீதியில் பாரிய அளவில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் அப் பகுதியில் உள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை அரசாங்க அதிபர் மற்றும் நாவலப்பிட்டி நகர சபை முதல்வர் ஆகியோர் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததுடன் இடிமின்னல், காற்று உள்ளிட்ட அனர்த்தத்தால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கங்கை போல் மாறிய சாலை - பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கண்டி - நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக அவ் வீதியில் செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் தோட்ட தொழிலாளர்கள் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அடிக்கடி இந்த வீதியில் பாரிய அளவில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் அப் பகுதியில் உள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மத்திய மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை அரசாங்க அதிபர் மற்றும் நாவலப்பிட்டி நகர சபை முதல்வர் ஆகியோர் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததுடன் இடிமின்னல், காற்று உள்ளிட்ட அனர்த்தத்தால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.