• Sep 03 2026

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Sep 3rd 2026, 2:55 pm
image


டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தெரிவித்துள்ளார்.


சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதுடன், அதனைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரஷிலா சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தெரிவித்துள்ளார்.சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதுடன், அதனைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரஷிலா சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement