• May 22 2026

நிந்தவூரில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஜனாதிபதி!

Chithra / May 22nd 2026, 1:42 pm
image

 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நடவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.


இன்று (22) வெள்ளிக்கிழமை காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.


அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு  நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்களுடன் அன்பு பகிர்ந்துகொண்டார்.


இந்நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்வுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


ஆனால் தகவல் திணைக்களத்தின் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டபோதும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிப்பது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது.


நிந்தவூரில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஜனாதிபதி  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நடவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.இன்று (22) வெள்ளிக்கிழமை காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு  நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்களுடன் அன்பு பகிர்ந்துகொண்டார்.இந்நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்வுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் தகவல் திணைக்களத்தின் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டபோதும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிப்பது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement