• Sep 07 2026

நாட்டில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரிப்பு

Aathira / Sep 7th 2026, 8:50 pm
image

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், செப்டம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 991 டெங்கு நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளதால், நோயாளிகள் பதிவில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள மொத்த நோயாளிகளில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். 

அந்த மாவட்டத்தில் இதுவரை 20,527 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரிப்பு நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.எனினும், செப்டம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 991 டெங்கு நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளதால், நோயாளிகள் பதிவில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை பதிவாகியுள்ள மொத்த நோயாளிகளில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 20,527 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement