• Sep 17 2026

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்தி பொய் – வெளியான தகவல்

Chithra / Sep 16th 2026, 12:09 pm
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னர் FCIDயில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பாணையும் வழங்கப்படவில்லை என்றும் அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


இன்று (16) அதிகாலை 12.50 மணியளவில் விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அழைப்பாணைக் கடிதத்தை ஷிரந்தி ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


FCIDயினால் முன்னதாக எந்தவொரு அழைப்பாணையும் அனுப்பப்படாத நிலையில், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே குறித்த கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த குடும்ப உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்தி பொய் – வெளியான தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னர் FCIDயில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு அழைப்பாணையும் வழங்கப்படவில்லை என்றும் அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.இன்று (16) அதிகாலை 12.50 மணியளவில் விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அழைப்பாணைக் கடிதத்தை ஷிரந்தி ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.FCIDயினால் முன்னதாக எந்தவொரு அழைப்பாணையும் அனுப்பப்படாத நிலையில், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே குறித்த கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த குடும்ப உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement