• May 20 2026

ஸ்ரீபுர, பதவி ஜயந்தி வித்தியாலயத்தின் புதிய பாடசாலை கட்டிடம் கிழக்கு ஆளுனரால் கையளிப்பு!

Ziya / May 19th 2026, 11:49 am
image

2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 14 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பதவி ஸ்ரீபுர, பதவி ஜயந்தி வித்தியாலயத்தின் புதிய இருமாடிக் கல்விக்கட்டிடமும் ஆசிரியர் விடுதியும் திறந்து வைத்து பாடசாலையின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (18) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன  தலைமையில் நடைபெற்றது.


இதன்போது, 06 வகுப்பறைகள் கொண்ட இருமாடிக் கல்விக்கட்டிடத்திற்காக ரூபாய் 10.5 மில்லியனும், புதிய ஆசிரியர் விடுதிக்காக ரூபாய் 3.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. 


மேலும், இன்னொரு புதிய ஆசிரியர் விடுதியின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந் நிகழ்வில் பதவி ஸ்ரீபுர பிரதேச சபை தலைவி ஷீலா கருணாநாயக்க அவர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வடக்கு (கோமரங்கடவல) வலயக் கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஸ்ரீபுர, பதவி ஜயந்தி வித்தியாலயத்தின் புதிய பாடசாலை கட்டிடம் கிழக்கு ஆளுனரால் கையளிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 14 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பதவி ஸ்ரீபுர, பதவி ஜயந்தி வித்தியாலயத்தின் புதிய இருமாடிக் கல்விக்கட்டிடமும் ஆசிரியர் விடுதியும் திறந்து வைத்து பாடசாலையின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (18) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன  தலைமையில் நடைபெற்றது.இதன்போது, 06 வகுப்பறைகள் கொண்ட இருமாடிக் கல்விக்கட்டிடத்திற்காக ரூபாய் 10.5 மில்லியனும், புதிய ஆசிரியர் விடுதிக்காக ரூபாய் 3.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. மேலும், இன்னொரு புதிய ஆசிரியர் விடுதியின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந் நிகழ்வில் பதவி ஸ்ரீபுர பிரதேச சபை தலைவி ஷீலா கருணாநாயக்க அவர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வடக்கு (கோமரங்கடவல) வலயக் கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement