• May 20 2026

நாமலின் சட்டக் கல்வி மர்மம் சபையில் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

dorin / Nov 19th 2025, 8:10 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்வித் தகுதியின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் வெளியான பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடாளுமன்றத்தில் இன்று சராமரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் இந்தக் கேள்விகளை முன்வைத்தார்.

நாமலின் சட்டக் கல்வி பட்டத்தின் மர்மம், நாமலின் சட்டக் கல்லூரி சேர்க்கை கோப்பில் பட்டச் சான்றிதழ் இல்லை ஆகிய தலைப்புகளில் வெளியான அறிக்கைகளில் இந்த வெளிப்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன என்றும், இவை கவலையைத் தூண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ, சிட்டி ஒஃப் லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்ற சட்டப் பட்டம் அதன்பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்காக அதைப் பயன்படுத்தியதில் உள்ள முரண்பாடுகளை ஊடகவியலாளர் நிர்மலா கண்ணங்கர அம்பலப்படுத்தியுள்ளார் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் கூறினார்.

அதில் 2009 செப்டம்பர் 15 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட சட்டக் கல்விக்கான சான்றிதழில், 54 நாட்களுக்கு முன்னர் பதவி விலகிய துணைவேந்தர் கையொப்பமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இது அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகின்றது.

நாமல் ராஜபக்ஷ, 2009 செப்டெம்பர் 25 அன்று சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், சிட்டி ஒஃப் லண்டன் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியால் 2009 ஒக்டோபர் 15 ஆம் திகதியன்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாமல் ராஜபக்ஷ 'Bachelor of Law with Honors Class 3 பட்டம் பெற்றுள்ளார் எனக் கூறுகின்றார். இந்தக் கல்வித் தகுதி பிரித்தானியாவின் சட்டப் பதிவுக்கான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை.

எனவே, சபையின் மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இது குறித்து தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாமல் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

நாமலின் சட்டக் கல்வி மர்மம் சபையில் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்வித் தகுதியின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் வெளியான பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடாளுமன்றத்தில் இன்று சராமரியாகக் கேள்விகளை எழுப்பினார்.இணையத்தில் வெளியிடப்பட்ட பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் இந்தக் கேள்விகளை முன்வைத்தார்.நாமலின் சட்டக் கல்வி பட்டத்தின் மர்மம், நாமலின் சட்டக் கல்லூரி சேர்க்கை கோப்பில் பட்டச் சான்றிதழ் இல்லை ஆகிய தலைப்புகளில் வெளியான அறிக்கைகளில் இந்த வெளிப்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன என்றும், இவை கவலையைத் தூண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நாமல் ராஜபக்ஷ, சிட்டி ஒஃப் லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்ற சட்டப் பட்டம் அதன்பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்காக அதைப் பயன்படுத்தியதில் உள்ள முரண்பாடுகளை ஊடகவியலாளர் நிர்மலா கண்ணங்கர அம்பலப்படுத்தியுள்ளார் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் கூறினார்.அதில் 2009 செப்டம்பர் 15 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட சட்டக் கல்விக்கான சான்றிதழில், 54 நாட்களுக்கு முன்னர் பதவி விலகிய துணைவேந்தர் கையொப்பமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இது அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகின்றது.நாமல் ராஜபக்ஷ, 2009 செப்டெம்பர் 25 அன்று சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், சிட்டி ஒஃப் லண்டன் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியால் 2009 ஒக்டோபர் 15 ஆம் திகதியன்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நாமல் ராஜபக்ஷ 'Bachelor of Law with Honors Class 3 பட்டம் பெற்றுள்ளார் எனக் கூறுகின்றார். இந்தக் கல்வித் தகுதி பிரித்தானியாவின் சட்டப் பதிவுக்கான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை.எனவே, சபையின் மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இது குறித்து தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாமல் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement