• Aug 25 2026

'ரத்தச் சிவப்பு' நிறத்தில் காட்சியளிக்கவுள்ள நிலவு! இலங்கையில் பார்க்க முடியுமா?

Chithra / Aug 24th 2026, 11:57 am
image


எதிர்வரும் ஒகஸ்ட் 28ஆம் திகதி விண்வெளியில் அரிய வானியல் நிகழ்வான பகுதி சந்திரகிரகணம் நிகழவுள்ளது.


இந்த சந்திரகிரகணத்தின்போது நிலவின் சுமார் 96 சதவீதப் பகுதி பூமியின் அடர் நிழலால் மறைக்கப்படவுள்ளதுடன், சுமார் 4 சதவீதப் பகுதி மட்டுமே வெளிச்சத்தில் காணப்படும்.


பொதுவாக முழு சந்திரகிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எனினும், இம்முறை 96 சதவீதம் மறைக்கப்படுவதால், பகுதி சந்திரகிரகணமாக இருந்தாலும் நிலவு ‘ரத்தச் சிவப்பு’ நிறத்தில் காட்சியளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் செல்லும் சூரிய ஒளி நிலவின் மீது படுவதால் அது சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.


இந்த கிரகணம் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 100 கோடி மக்கள் இந்த வானியல் நிகழ்வை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெறுவர்.


மேலும், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் கிரகணத்தை அவதானிக்க முடியும்.


இதேவேளை, இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் கிரகணம் நிகழும் நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதால், அப்பகுதிகளில் இருந்து இதனை நேரடியாகக் காண முடியாது.


இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28ஆம் திகதி காலை 8.04 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம், காலை 9.43 மணிக்கு உச்சத்தை எட்டி, முற்பகல் 11.22 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரத்தச் சிவப்பு' நிறத்தில் காட்சியளிக்கவுள்ள நிலவு இலங்கையில் பார்க்க முடியுமா எதிர்வரும் ஒகஸ்ட் 28ஆம் திகதி விண்வெளியில் அரிய வானியல் நிகழ்வான பகுதி சந்திரகிரகணம் நிகழவுள்ளது.இந்த சந்திரகிரகணத்தின்போது நிலவின் சுமார் 96 சதவீதப் பகுதி பூமியின் அடர் நிழலால் மறைக்கப்படவுள்ளதுடன், சுமார் 4 சதவீதப் பகுதி மட்டுமே வெளிச்சத்தில் காணப்படும்.பொதுவாக முழு சந்திரகிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எனினும், இம்முறை 96 சதவீதம் மறைக்கப்படுவதால், பகுதி சந்திரகிரகணமாக இருந்தாலும் நிலவு ‘ரத்தச் சிவப்பு’ நிறத்தில் காட்சியளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் செல்லும் சூரிய ஒளி நிலவின் மீது படுவதால் அது சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.இந்த கிரகணம் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 100 கோடி மக்கள் இந்த வானியல் நிகழ்வை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெறுவர்.மேலும், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் கிரகணத்தை அவதானிக்க முடியும்.இதேவேளை, இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் கிரகணம் நிகழும் நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதால், அப்பகுதிகளில் இருந்து இதனை நேரடியாகக் காண முடியாது.இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28ஆம் திகதி காலை 8.04 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம், காலை 9.43 மணிக்கு உச்சத்தை எட்டி, முற்பகல் 11.22 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement