• Sep 08 2026

நாட்டை வந்தடைந்தது இந்திய போர்க்கப்பல் ‘INS UDAYGIRI’

Chithra / Sep 8th 2026, 2:38 pm
image


இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) நாட்டை வந்தடைந்துள்ளது.


149.02 மீற்றர் நீளமுடைய இந்த Frigate வகை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்கப்பட்டுள்ளது.


கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் Vikas Sood மற்றும் இலங்கை மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில், ‘INS UDAYGIRI’ இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இருநாட்டு கடற்படைகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதன் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 

மேலும், இலங்கையின் முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அத்துடன், போர்க்கப்பலின் செயற்பாடுகளை பார்வையிடவும், தொழில்முறை அறிவைப் பரிமாறிக்கொள்ளவும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், கப்பலுக்குள் பயிற்சித் திட்டங்களும் நடத்தப்படவுள்ளன.

நாட்டை வந்தடைந்தது இந்திய போர்க்கப்பல் ‘INS UDAYGIRI’ இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) நாட்டை வந்தடைந்துள்ளது.149.02 மீற்றர் நீளமுடைய இந்த Frigate வகை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்கப்பட்டுள்ளது.கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் Vikas Sood மற்றும் இலங்கை மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், ‘INS UDAYGIRI’ இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இருநாட்டு கடற்படைகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதன் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், இலங்கையின் முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன், போர்க்கப்பலின் செயற்பாடுகளை பார்வையிடவும், தொழில்முறை அறிவைப் பரிமாறிக்கொள்ளவும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், கப்பலுக்குள் பயிற்சித் திட்டங்களும் நடத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement