• May 30 2026

காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்ணாவிரத போராட்டம்....! இரண்டாவது நாளாக முல்லையில் முன்னெடுப்பு!

shanu / Sep 26th 2025, 4:16 pm
image

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. 



இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு வலிந்து காணமால் ஆக்கப்படுதல்,  போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கூறுகின்றோம் எனும் தொனிப்பொருளில்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 


வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்பவர்களின் உறவுகளின் சங்கத்தால் செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டமானது இன்றையதினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. 


இவ் உண்ணாவிரத போராட்டத்தில் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் இளைஞர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  


இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்ணாவிரத போராட்டம். இரண்டாவது நாளாக முல்லையில் முன்னெடுப்பு வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு வலிந்து காணமால் ஆக்கப்படுதல்,  போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கூறுகின்றோம் எனும் தொனிப்பொருளில்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்பவர்களின் உறவுகளின் சங்கத்தால் செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டமானது இன்றையதினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் உண்ணாவிரத போராட்டத்தில் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் இளைஞர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement