• May 23 2026

வௌ்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை!

Chithra / May 22nd 2026, 11:15 am
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால் அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார்.


இதவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.


இதன் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவித்துள்ளனர். 


இதேவேளை நள்ளிரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


பெரியமுல்லை பிரதேசத்தில் கோமஸ் வத்தை, இரப்பர் வத்தை, தெனியாய வத்தை, செல்லக்கந்த ஆகிய பகுதிகளும், கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்தை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 


இந்த பிரதேசங்களில் பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பலர் தமது இருப்பிடங்களை விட்டு உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர்.


இதேவேளை, தளுப்பத்தை பல்லன் சேனை வீதியின் ஒரு பகுதி முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளது. 


மேலும் நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் மல்லவகெதர பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

வௌ்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால் அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார்.இதவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.இதன் காரணமாக அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை நள்ளிரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பெரியமுல்லை பிரதேசத்தில் கோமஸ் வத்தை, இரப்பர் வத்தை, தெனியாய வத்தை, செல்லக்கந்த ஆகிய பகுதிகளும், கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்தை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த பிரதேசங்களில் பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பலர் தமது இருப்பிடங்களை விட்டு உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர்.இதேவேளை, தளுப்பத்தை பல்லன் சேனை வீதியின் ஒரு பகுதி முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளது. மேலும் நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் மல்லவகெதர பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement