• May 17 2026

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலவசக் கல்வியைச் சீரழிக்க அரசாங்கம் முயற்சி: சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு

Chithra / Jan 13th 2026, 7:10 pm
image


தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெகிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். 

இன்றை தினம் எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், 

கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் அவசியம் என்பதை தமது கட்சி ஏற்றுக்கொண்டாலும், தற்போதைய அரசாங்கம் எவ்வித முன்னோடித் திட்டங்களும் இன்றி, கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். 

நிபுணர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருடனோ ஆலோசிக்காமல் அவசர அவசரமாக இவை முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

76 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த இலவசக் கல்வியின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், பாடசாலைக் கல்வியை உள்நாட்டிலேயே பலவீனப்படுத்தி, தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டார். 

புதிய கல்வித் தொகுதிகளில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் இளைஞர், யுவதிகளின் நடத்தை மற்றும் சமூக விழுமியங்களுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளதாக எச்சரித்த அவர், பாலியல் நோக்குநிலை தொடர்பான பிரசாரங்கள் மற்றும் பாலியல் தொழிலை ஊக்குவிப்பது போன்ற மறைமுகத் தாக்கங்கள் ஆரோக்கியமான சமூகத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்றும், எய்ட்ஸ் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விடயங்களில் அரசாங்கம் முறையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பாடத் தொகுதிகளில் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஏராளமான தவறுகள் காணப்படுவதாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பொருத்தமற்ற படங்கள் மற்றும் பௌத்த மத அடையாளமான 'தர்மச்சக்கரம்' தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். 

பாடசாலைகளில் போதிய பௌதிக வளங்கள், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் இல்லாத நிலையில் இவ்வாறான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது நகைப்புக்குரியது என விமர்சித்த சஞ்சீவ, அரசாங்கம் தனது பிடிவாதமான போக்கைக் கைவிட்டு, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடன் விரிவான முறையில் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கக்கூடிய பலமான தலைமுறையை உருவாக்கும் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலவசக் கல்வியைச் சீரழிக்க அரசாங்கம் முயற்சி: சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெகிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். இன்றை தினம் எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் அவசியம் என்பதை தமது கட்சி ஏற்றுக்கொண்டாலும், தற்போதைய அரசாங்கம் எவ்வித முன்னோடித் திட்டங்களும் இன்றி, கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். நிபுணர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருடனோ ஆலோசிக்காமல் அவசர அவசரமாக இவை முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.76 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த இலவசக் கல்வியின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், பாடசாலைக் கல்வியை உள்நாட்டிலேயே பலவீனப்படுத்தி, தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டார். புதிய கல்வித் தொகுதிகளில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் இளைஞர், யுவதிகளின் நடத்தை மற்றும் சமூக விழுமியங்களுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளதாக எச்சரித்த அவர், பாலியல் நோக்குநிலை தொடர்பான பிரசாரங்கள் மற்றும் பாலியல் தொழிலை ஊக்குவிப்பது போன்ற மறைமுகத் தாக்கங்கள் ஆரோக்கியமான சமூகத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்றும், எய்ட்ஸ் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விடயங்களில் அரசாங்கம் முறையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பாடத் தொகுதிகளில் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஏராளமான தவறுகள் காணப்படுவதாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பொருத்தமற்ற படங்கள் மற்றும் பௌத்த மத அடையாளமான 'தர்மச்சக்கரம்' தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். பாடசாலைகளில் போதிய பௌதிக வளங்கள், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் இல்லாத நிலையில் இவ்வாறான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது நகைப்புக்குரியது என விமர்சித்த சஞ்சீவ, அரசாங்கம் தனது பிடிவாதமான போக்கைக் கைவிட்டு, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடன் விரிவான முறையில் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கக்கூடிய பலமான தலைமுறையை உருவாக்கும் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement