ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கடந்த வியாழக்கிழமை (21), 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பதுளை - ஹாலிஎல - தெமோதறை பகுதியைச் சேர்ந்த செல்லையா மனோஜ் என்ற 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சந்தேகநபர், கொழும்பில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளார்.
அந்தப் பெண்ணின் சகோதரர் வீட்டிலேயே அவர் தஞ்சமடைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் ஹட்டன் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.
டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணீரில் மூழ்கிய டிக்கோயா தம்பதியினரின் இறுதிச் சடங்கு; சந்தேகநபரிடம் ஆயுதங்கள் மீட்பு ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் நேற்று உத்தரவிட்டுள்ளார்.டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கடந்த வியாழக்கிழமை (21), 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.பதுளை - ஹாலிஎல - தெமோதறை பகுதியைச் சேர்ந்த செல்லையா மனோஜ் என்ற 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சந்தேகநபர், கொழும்பில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் சகோதரர் வீட்டிலேயே அவர் தஞ்சமடைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.மேலும் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் ஹட்டன் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.