• Aug 23 2026

குடும்பத்தையே சிதைத்த செல்போன் ஆசை-மலை உச்சியில் நடந்த சோகம்!

Ziya / Aug 22nd 2026, 12:26 pm
image


மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், புதிய செல்போன் வாங்குவது தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரைப் பறித்த சோகத்தில் முடிந்துள்ளது.


திஸ்காவ் அருகே உள்ள காவ்ட்யா டோங்கர் மலையில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் குடும்பத் தகராறைத் தொடர்ந்து மலை உச்சிக்கு சென்றதாகவும், அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவரை சமாதானப்படுத்துவதற்காக பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் நீண்ட நேரம் முயன்றுள்ளனர்.


அப்போது மகனை காப்பாற்ற முயன்ற 48 வயதான தந்தை முரளிதர் சந்த்குடே, மகனை பிடிக்கச் சென்றபோது நிலைதடுமாறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் கீழே குதித்ததாகவும், அவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன.


சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், மூவரையும் காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


ஒரு செல்போன் தொடர்பான குடும்பத் தகராறு எவ்வளவு கொடூரமான முடிவை ஏற்படுத்தியுள்ளது என்பது மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது


குடும்பத்தையே சிதைத்த செல்போன் ஆசை-மலை உச்சியில் நடந்த சோகம் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், புதிய செல்போன் வாங்குவது தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரைப் பறித்த சோகத்தில் முடிந்துள்ளது.திஸ்காவ் அருகே உள்ள காவ்ட்யா டோங்கர் மலையில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் குடும்பத் தகராறைத் தொடர்ந்து மலை உச்சிக்கு சென்றதாகவும், அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை சமாதானப்படுத்துவதற்காக பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் நீண்ட நேரம் முயன்றுள்ளனர்.அப்போது மகனை காப்பாற்ற முயன்ற 48 வயதான தந்தை முரளிதர் சந்த்குடே, மகனை பிடிக்கச் சென்றபோது நிலைதடுமாறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் கீழே குதித்ததாகவும், அவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன.சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், மூவரையும் காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.ஒரு செல்போன் தொடர்பான குடும்பத் தகராறு எவ்வளவு கொடூரமான முடிவை ஏற்படுத்தியுள்ளது என்பது மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement