பாதெனிய - அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என்று கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய கே.எஸ்.எம். பியசேன திஸாநாயக்க என்பவரே இவ்வாறு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நபர் மஹகல்கடவல பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு,
மோட்டார் சைக்கிளில் மீண்டும் தனது இல்லத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மஹகல்கடவல வளைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைக் கல்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி பாதெனிய - அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என்று கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய கே.எஸ்.எம். பியசேன திஸாநாயக்க என்பவரே இவ்வாறு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,மேற்படி நபர் மஹகல்கடவல பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் தனது இல்லத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.மஹகல்கடவல வளைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைக் கல்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.