• May 19 2026

பருத்தித்துறையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்; மீனவராக இருக்கலாமென சந்தேகம்

Chithra / Dec 24th 2025, 12:26 pm
image

 

வடமராட்சி, பருத்தித்துறை - இன்பர்சிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (24) காலை கரையொதுங்கியுள்ளது.


குறித்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. 


நீல நிற காற்சட்டை மற்றும் பட்டர் நிற ரி-சேர்ட் அணிந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 


குறித்த சடலம் மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் என சடலத்தை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


பருத்தித்துறையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்; மீனவராக இருக்கலாமென சந்தேகம்  வடமராட்சி, பருத்தித்துறை - இன்பர்சிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (24) காலை கரையொதுங்கியுள்ளது.குறித்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. நீல நிற காற்சட்டை மற்றும் பட்டர் நிற ரி-சேர்ட் அணிந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த சடலம் மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் என சடலத்தை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement