• Jun 02 2026

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா.!

Ziya / Jun 1st 2026, 2:37 pm
image

திருகோணமலை  மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் வடக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா  ஞாயிற்றுக்கிழமை (31) காலை 8.00 மணி 52 நிமிட சுப வேளையில் 


சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆரம்பப் பூசையினைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி வளர்ந்து தூக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தைச் சென்றடைந்தது மடைப்பெட்டி வளர்ந்து பக்தி பூர்வமாக ஆலயத்தின் பிரதம குரு பல்துறைக்கலைஞர்,  சோதிடர்,  கலாபூஷணம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் அவர்களினால் மடைப்பெட்டி கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


இதன் போது வேளைநூல் கட்டுதல்,  பிரதான பொங்கல் சாடி வைத்தல்,  பால்பழப்பூசை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்க்கும் நிகழ்வுள் இடம் பெற்றன.


நிறைவாக  விஷேட தீபாராதனைகளுடன் பூசை இடம் பெற்று மாலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆறுமுக வேல் சகிதம் நாகம்மாள் பவனி இடம் பெற்றது.


இம் முறை வைகாசிப் பொங்கல் பெருவிழாவில் நாட்டின் பல இடங்களில் இருந்தும் பல ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டமை சிறப்பாகும்


சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா. திருகோணமலை  மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் வடக்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா  ஞாயிற்றுக்கிழமை (31) காலை 8.00 மணி 52 நிமிட சுப வேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆரம்பப் பூசையினைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி வளர்ந்து தூக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தைச் சென்றடைந்தது மடைப்பெட்டி வளர்ந்து பக்தி பூர்வமாக ஆலயத்தின் பிரதம குரு பல்துறைக்கலைஞர்,  சோதிடர்,  கலாபூஷணம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் அவர்களினால் மடைப்பெட்டி கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.இதன் போது வேளைநூல் கட்டுதல்,  பிரதான பொங்கல் சாடி வைத்தல்,  பால்பழப்பூசை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்க்கும் நிகழ்வுள் இடம் பெற்றன.நிறைவாக  விஷேட தீபாராதனைகளுடன் பூசை இடம் பெற்று மாலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆறுமுக வேல் சகிதம் நாகம்மாள் பவனி இடம் பெற்றது.இம் முறை வைகாசிப் பொங்கல் பெருவிழாவில் நாட்டின் பல இடங்களில் இருந்தும் பல ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டமை சிறப்பாகும்

Advertisement

Advertisement

Advertisement