• Aug 18 2026

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Chithra / Aug 18th 2026, 1:41 pm
image

 

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.


உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு  அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement