• Sep 08 2026

சைவ அமைப்புக்களின் தலைமை பிரதானியாக தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவு.!

dorin / Sep 7th 2026, 1:45 pm
image

சைவ அமைப்புக்களின் தலைமை பிரதானியாக தவத்திரு அகத்தியர்  அடிகளார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சைவ அமைப்புக்களை ஒழுங்கு படுத்தும் கூட்டம் வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்று காலை 10:30 மணியளவில் இடம்பெற்றது. இக் கூட்டத்திலேயே தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர்  அடிகளார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இக் கூட்டத்தில் திருக்கோவில்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும்,  பக்தர்களிற்கும் அயற் பிரதேச குடிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதீத ஒலி,  ஒளி நிகழ்வு செயற்பாடுகளும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,  தவத்திரு அகத்தி அடிகளார் சைவ அமைப்புக்களின் பிரதானியாக தெரிவு செய்யப்படடமையை 

சைவ சமயிகளிடமும்,  இந்துக் கலாச்சார திணைக்களம்,  உட்பட அரச திணைக்களங்கள்,  அரச உயர் மட்டத்திற்கும் எடுத்து செல்வதெனவும்,  தவத்திரு அகத்தியர் அடிகளாரை வெற்றிடமாகவுள்ள நல்லை குருமகா சந்நிதானத்திற்கு  முதல்வராக நியமிக்க அனேக சைவ சமய அமைப்புக்களும்,  நல்லை ஆதீன நம்பிக்கை பொறுப்புச் சபையும்,  விடுத்த அழைப்பை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக் கொண்டிருப்பதனாலும், அவரை முதல்வராக நியமிக்க  நல்லை  ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபை விரைந்து செயற்படுத்த வேண்டும் எனவும், 

மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிப்பதென்றும்,  நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்,  வவுனியா சிவன் கோயில்,  இலண்டன் கனதுர்க்கை அம்மன் ஆலயம்,  தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் போன்று அனைத்து ஆலயங்களும் அறப்பணிக்களை சைவ சமயக் குடிகளிற்கு ஆற்ற வேண்டும் என்றும்,

22வது அரசியலமைப்பு உட்பட,  எதிர்வரும் அரசியல் அமைப்பு யாப்பு சீரதிருத்தங்களில் சைவசமயிகளின் அபிலாசைகளை சரிவர சட்ட ரீதியாக  சைவசமய தலைமைப்பீடம் வெளிப்படுத்தும் வகையில் திருக்கோணேசுவர ஆலய தலைவர் சட்டதரணி துசியந்தன் அவர்களை இணைப்பாளராகக்கொண்டு ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

குறித்த நிபுணர் குழுவிற்கு மூத்த சட்டதரணி இரட்ணவேல்,  ஜெயரூபன்,  தயாபரன் ஆகியோரும், முன்னாள் தமிழ் கூட்டமைப்பு சைவ சமய விவாகாரங்களிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் ஆகியோர் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கூட்டத்திற்கு  தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் திருமுன்னிலை  வகிக்க வவுனியா  அகிலாணடேசுவரர் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா,  திருக்கோணேசுவர தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன்,  நயினை நாகபூசணி அம்மன் ஆலய  தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன்,  சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார்,  கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், 

இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய  அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார்,  அகில இலங்கைச் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார்,  கிளிநொச்சி திரு நெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், 

வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன்,  சிவச்  சகோதரர்கள், சிவதொண்டர், சிவமங்கயர், ஆகிய அமைப்புக்களின்  மாவட்ப இணைப்பாளர்கள், 

ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்தை தலமைய கமாக  கொண்ட சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சஙகம்,  மலையகத்தை தலைமையாக கொண்ட சிவசகோதரர் அமைப்பு,  கொழும்பை தலைமையமாக்

கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம்,  போன்ற நாடாளாவிய அமைப்புக்களும்,  பிராந்திய மற்றும் நாடாளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும்,  

அம்பாறை சைவநெறிக்கூடம்,  மட்டக்களப்பு சிவதொண்டர் கூட்டம்,  கல்முனை சைவ அறப்பணி நிலையம்,  ஆகிய சைவ அமைப்புக்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவசமயிகளின் தலைமையாக ஏற்க தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டு இருந்தன. 

அதேவேளை கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்கும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

சைவ அமைப்புக்களின் தலைமை பிரதானியாக தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவு. சைவ அமைப்புக்களின் தலைமை பிரதானியாக தவத்திரு அகத்தியர்  அடிகளார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சைவ அமைப்புக்களை ஒழுங்கு படுத்தும் கூட்டம் வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்று காலை 10:30 மணியளவில் இடம்பெற்றது. இக் கூட்டத்திலேயே தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர்  அடிகளார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இக் கூட்டத்தில் திருக்கோவில்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும்,  பக்தர்களிற்கும் அயற் பிரதேச குடிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதீத ஒலி,  ஒளி நிகழ்வு செயற்பாடுகளும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,  தவத்திரு அகத்தி அடிகளார் சைவ அமைப்புக்களின் பிரதானியாக தெரிவு செய்யப்படடமையை சைவ சமயிகளிடமும்,  இந்துக் கலாச்சார திணைக்களம்,  உட்பட அரச திணைக்களங்கள்,  அரச உயர் மட்டத்திற்கும் எடுத்து செல்வதெனவும்,  தவத்திரு அகத்தியர் அடிகளாரை வெற்றிடமாகவுள்ள நல்லை குருமகா சந்நிதானத்திற்கு  முதல்வராக நியமிக்க அனேக சைவ சமய அமைப்புக்களும்,  நல்லை ஆதீன நம்பிக்கை பொறுப்புச் சபையும்,  விடுத்த அழைப்பை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக் கொண்டிருப்பதனாலும், அவரை முதல்வராக நியமிக்க  நல்லை  ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபை விரைந்து செயற்படுத்த வேண்டும் எனவும், மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிப்பதென்றும்,  நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்,  வவுனியா சிவன் கோயில்,  இலண்டன் கனதுர்க்கை அம்மன் ஆலயம்,  தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் போன்று அனைத்து ஆலயங்களும் அறப்பணிக்களை சைவ சமயக் குடிகளிற்கு ஆற்ற வேண்டும் என்றும்,22வது அரசியலமைப்பு உட்பட,  எதிர்வரும் அரசியல் அமைப்பு யாப்பு சீரதிருத்தங்களில் சைவசமயிகளின் அபிலாசைகளை சரிவர சட்ட ரீதியாக  சைவசமய தலைமைப்பீடம் வெளிப்படுத்தும் வகையில் திருக்கோணேசுவர ஆலய தலைவர் சட்டதரணி துசியந்தன் அவர்களை இணைப்பாளராகக்கொண்டு ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறித்த நிபுணர் குழுவிற்கு மூத்த சட்டதரணி இரட்ணவேல்,  ஜெயரூபன்,  தயாபரன் ஆகியோரும், முன்னாள் தமிழ் கூட்டமைப்பு சைவ சமய விவாகாரங்களிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் ஆகியோர் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இன்றைய கூட்டத்திற்கு  தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் திருமுன்னிலை  வகிக்க வவுனியா  அகிலாணடேசுவரர் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா,  திருக்கோணேசுவர தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன்,  நயினை நாகபூசணி அம்மன் ஆலய  தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன்,  சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார்,  கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய  அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார்,  அகில இலங்கைச் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார்,  கிளிநொச்சி திரு நெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன்,  சிவச்  சகோதரர்கள், சிவதொண்டர், சிவமங்கயர், ஆகிய அமைப்புக்களின்  மாவட்ப இணைப்பாளர்கள், ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.யாழ்ப்பாணத்தை தலமைய கமாக  கொண்ட சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சஙகம்,  மலையகத்தை தலைமையாக கொண்ட சிவசகோதரர் அமைப்பு,  கொழும்பை தலைமையமாக்கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம்,  போன்ற நாடாளாவிய அமைப்புக்களும்,  பிராந்திய மற்றும் நாடாளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும்,  அம்பாறை சைவநெறிக்கூடம்,  மட்டக்களப்பு சிவதொண்டர் கூட்டம்,  கல்முனை சைவ அறப்பணி நிலையம்,  ஆகிய சைவ அமைப்புக்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவசமயிகளின் தலைமையாக ஏற்க தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டு இருந்தன. அதேவேளை கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்கும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Advertisement

Advertisement

Advertisement