• Sep 21 2026

விடுமுறை நாளில் நடந்த கோர சோகம்! நீரில் மூழ்கி நால்வர் பலி! மாணவன் மாயம்

Chithra / Sep 20th 2026, 10:18 am
image


மேல் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் மூழ்கி  நால்வர் உயிரிழந்தும்

காணாமலும் போன சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.


கம்பஹா மாவட்டம் படல்கம பகுதியில் உள்ள மகா ஓயாவில் நீராடச் சென்ற இறைச்சிப் பதப்படுத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


விடுமுறை தினமான நேற்று மதியம், கார்பன் தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள மகா ஓயாவில் நீராடியபோது மூன்று யுவதிகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.


பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன. 


உயிரிழந்தவர்கள் பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.



இதேவேளை, பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடற்பகுதியில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.


சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் மேலும் மூவருடன் இணைந்து கடற்கரையை ஒட்டியுள்ள பாறை அணைக்கு அருகில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறை நாளில் நடந்த கோர சோகம் நீரில் மூழ்கி நால்வர் பலி மாணவன் மாயம் மேல் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் மூழ்கி  நால்வர் உயிரிழந்தும்காணாமலும் போன சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.கம்பஹா மாவட்டம் படல்கம பகுதியில் உள்ள மகா ஓயாவில் நீராடச் சென்ற இறைச்சிப் பதப்படுத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.விடுமுறை தினமான நேற்று மதியம், கார்பன் தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள மகா ஓயாவில் நீராடியபோது மூன்று யுவதிகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடற்பகுதியில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் மேலும் மூவருடன் இணைந்து கடற்கரையை ஒட்டியுள்ள பாறை அணைக்கு அருகில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement