• May 25 2026

களுவாஞ்சிகுடி கடலில் பதற்றம்; இளைஞன் மாயம்! படகு கண்டுபிடிப்பு

Chithra / May 25th 2026, 8:17 am
image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன்பிடிக்க சென்ற 19 வயது இளைஞனான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


கடந்த சனிக்கிழமை (23) கடலுக்கு இரவு சென்றவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 


இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில்  மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும், அதில் அவர் இல்லாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


களுவாஞ்சிகுடி கடலில் பதற்றம்; இளைஞன் மாயம் படகு கண்டுபிடிப்பு மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன்பிடிக்க சென்ற 19 வயது இளைஞனான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.கடந்த சனிக்கிழமை (23) கடலுக்கு இரவு சென்றவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில்  மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும், அதில் அவர் இல்லாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement