• May 31 2026

மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் பரிதாப மரணம்! மஸ்கெலியாவில் சோகம்

Chithra / May 31st 2026, 8:50 am
image

மஸ்கெலியா - கிலன்டில் தோட்டத்தில் தேவாலய விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இச் சோகச் சம்பவம் நேற்று  மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தின் பெரிய நடுத்தோட்டப் பிரிவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விஸ்தரிப்பு செய்வதற்கான பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 இதற்காக நிலத்தின் தளம் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த பாரிய மண் திட்டு ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.


இதன்போது, பணியில் ஈடுபட்டிருந்த மத போதகர் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்த மண் திட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டார்.


மண்ணுக்குள் சிக்கிய அவரை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, ஆபத்தான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 


எனினும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேளையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பெரிய நடுத்தோட்ட 41 வயதான கிறிஸ்தவ மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


இவ் விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் பரிதாப மரணம் மஸ்கெலியாவில் சோகம் மஸ்கெலியா - கிலன்டில் தோட்டத்தில் தேவாலய விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சோகச் சம்பவம் நேற்று  மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தின் பெரிய நடுத்தோட்டப் பிரிவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விஸ்தரிப்பு செய்வதற்கான பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நிலத்தின் தளம் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த பாரிய மண் திட்டு ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.இதன்போது, பணியில் ஈடுபட்டிருந்த மத போதகர் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்த மண் திட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டார்.மண்ணுக்குள் சிக்கிய அவரை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, ஆபத்தான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேளையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பெரிய நடுத்தோட்ட 41 வயதான கிறிஸ்தவ மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.இவ் விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement