கனடாவில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான Toronto Tamil Book Fair 2026 – டொரொண்டோ தமிழ் புத்தக அரங்கு, அக்டோபர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் Scarborough பகுதியில் நடைபெறவுள்ளது.
தமிழ் நூல்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் வாசகர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் இந்தப் புத்தக அரங்கில் பல்வேறு நூல் அறிமுக நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் மற்றும் இலக்கிய உரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
ஜேர்மனியில் வாழும் எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் “கனவுகளின் வரைபடம்” நூல் அறிமுக நிகழ்வு அக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நூல் அறிமுகத்தை பார்வதி கந்தசாமி மேற்கொள்ளவுள்ளதுடன், ஏற்புரையை எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தி வழங்கவுள்ளார். நிகழ்ச்சியை எம். பெளசர் தொகுத்து வழங்கவுள்ளார்.
அக்டோபர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு, க. சண்முகலிங்கம் எழுதிய “முதுமை வாழ்வின் முழுமை” நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது
முதுமையை வாழ்க்கையின் இயல்பான ஓர் அங்கமாக அணுகும் விதம், சமூகத்தில் முதியோரின் இடம் மற்றும் குடும்பங்களின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்த நூல் பேசுகிறது.
அதே நாளான மாலை 6 மணிக்கு, ஒலிவர் இயல் விருதாளர் முருகனுடன் சிறப்பு உரையாடலும் இடம்பெறவுள்ளது.
“புத்தகங்களும் வாசிப்பும் எனது வாழ்க்கை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியை எம். பெளசர் தொகுத்து வழங்கவுள்ளதுடன், கனடா தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த எஸ். ராஜரத்தினம் கருத்துரையாற்றவுள்ளார்.
புத்தக அரங்கில் பல்வேறு தமிழ் பதிப்பகங்கள் மற்றும் நூல் விற்பனையாளர்கள் பங்கேற்கவுள்ளதுடன், இலக்கியம், வரலாறு, சமூக ஆய்வு, குழந்தைகள் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் நூல்களை வாசகர்கள் பார்வையிட்டு வாங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Tamil Books Canada Stall மூலமும் பல முக்கிய தமிழ் நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு, Malvern Family Resources Centre, 90 Littles Road, Scarborough, Ontario, M1B 5E2 ,Canada என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
தமிழ் மொழியையும், வாசிப்பு பழக்கத்தையும், இலக்கியப் பரிமாற்றத்தையும் கொண்டாடும் இந்த இருநாள் நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள், இலக்கிய ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
புத்தகங்களை வாங்குவதற்கான இடமாக மட்டுமல்லாமல், எழுத்தாளர்களை நேரில் சந்திக்கவும், புதிய நூல்களை அறிந்துகொள்ளவும், தமிழ் இலக்கிய உலகத்துடன் நெருக்கமாக இணையவும் இந்த நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலதிக தகவல்களுக்கு, info@torontotamilbookfair.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது +1 647 926 9787 என்ற தொலைபேசி இலக்கத்தையோ தொடர்புகொள்ளலாம்.
டொரொண்டோவில் தமிழ் புத்தக அரங்கு 2026 கனடாவில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான Toronto Tamil Book Fair 2026 – டொரொண்டோ தமிழ் புத்தக அரங்கு, அக்டோபர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் Scarborough பகுதியில் நடைபெறவுள்ளது.தமிழ் நூல்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் வாசகர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் இந்தப் புத்தக அரங்கில் பல்வேறு நூல் அறிமுக நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் மற்றும் இலக்கிய உரையாடல்கள் இடம்பெறவுள்ளன.ஜேர்மனியில் வாழும் எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் “கனவுகளின் வரைபடம்” நூல் அறிமுக நிகழ்வு அக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.நூல் அறிமுகத்தை பார்வதி கந்தசாமி மேற்கொள்ளவுள்ளதுடன், ஏற்புரையை எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தி வழங்கவுள்ளார். நிகழ்ச்சியை எம். பெளசர் தொகுத்து வழங்கவுள்ளார்.அக்டோபர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு, க. சண்முகலிங்கம் எழுதிய “முதுமை வாழ்வின் முழுமை” நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளதுமுதுமையை வாழ்க்கையின் இயல்பான ஓர் அங்கமாக அணுகும் விதம், சமூகத்தில் முதியோரின் இடம் மற்றும் குடும்பங்களின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்த நூல் பேசுகிறது.அதே நாளான மாலை 6 மணிக்கு, ஒலிவர் இயல் விருதாளர் முருகனுடன் சிறப்பு உரையாடலும் இடம்பெறவுள்ளது.“புத்தகங்களும் வாசிப்பும் எனது வாழ்க்கை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியை எம். பெளசர் தொகுத்து வழங்கவுள்ளதுடன், கனடா தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த எஸ். ராஜரத்தினம் கருத்துரையாற்றவுள்ளார்.புத்தக அரங்கில் பல்வேறு தமிழ் பதிப்பகங்கள் மற்றும் நூல் விற்பனையாளர்கள் பங்கேற்கவுள்ளதுடன், இலக்கியம், வரலாறு, சமூக ஆய்வு, குழந்தைகள் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் நூல்களை வாசகர்கள் பார்வையிட்டு வாங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.Tamil Books Canada Stall மூலமும் பல முக்கிய தமிழ் நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந் நிகழ்வு, Malvern Family Resources Centre, 90 Littles Road, Scarborough, Ontario, M1B 5E2 ,Canada என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.தமிழ் மொழியையும், வாசிப்பு பழக்கத்தையும், இலக்கியப் பரிமாற்றத்தையும் கொண்டாடும் இந்த இருநாள் நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள், இலக்கிய ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.புத்தகங்களை வாங்குவதற்கான இடமாக மட்டுமல்லாமல், எழுத்தாளர்களை நேரில் சந்திக்கவும், புதிய நூல்களை அறிந்துகொள்ளவும், தமிழ் இலக்கிய உலகத்துடன் நெருக்கமாக இணையவும் இந்த நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமையும்.மேலதிக தகவல்களுக்கு, info@torontotamilbookfair.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது +1 647 926 9787 என்ற தொலைபேசி இலக்கத்தையோ தொடர்புகொள்ளலாம்.