• Aug 24 2026

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இலங்கைப் படகு தப்பியோட்டம்! இந்திய கடற்பரப்பில் பரபரப்பு

Chithra / Aug 24th 2026, 4:29 pm
image


இந்தியாவின் கோட்டைபட்டினம் அருகே கரையில் இருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று நீண்ட நேரம் நடமாடியதால் இன்று (24) காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கரையை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகு நடமாடியதை அவதானித்த இந்திய பொலிஸார், அதனை மடக்கிப் பிடிக்க முயற்சித்துள்ளனர்.


இதனையடுத்து பொலிஸார் படகில் சென்று இலங்கைப் படகை சுற்றிவளைத்த போதிலும், அந்தப் படகு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த படகில் இருவர் காணப்பட்டதாகவும், அதில் சந்தேகத்திற்கிடமான மூடைகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனால், குறித்த படகு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இந்தியத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இலங்கைப் படகு தப்பியோட்டம் இந்திய கடற்பரப்பில் பரபரப்பு இந்தியாவின் கோட்டைபட்டினம் அருகே கரையில் இருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று நீண்ட நேரம் நடமாடியதால் இன்று (24) காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரையை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகு நடமாடியதை அவதானித்த இந்திய பொலிஸார், அதனை மடக்கிப் பிடிக்க முயற்சித்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸார் படகில் சென்று இலங்கைப் படகை சுற்றிவளைத்த போதிலும், அந்தப் படகு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த படகில் இருவர் காணப்பட்டதாகவும், அதில் சந்தேகத்திற்கிடமான மூடைகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், குறித்த படகு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இந்தியத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement