• Aug 28 2026

டைனமைட் மூலம் மீன்பிடித்ததாக சந்தேகம் - மன்னாரில் மூவர் சிக்கினர்!

Chithra / Aug 28th 2026, 4:57 pm
image


மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, 500 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களின் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


டைனமைட் மூலம் மீன்பிடித்ததாக சந்தேகம் - மன்னாரில் மூவர் சிக்கினர் மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, 500 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களின் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement