• May 22 2026

தலைமன்னாரில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

Chithra / May 22nd 2026, 2:11 pm
image

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் போது பொலிஸ்,இராணுவம் மற்றும் கடற் படையினரின் தீவிர முயற்சியால் நீண்ட நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீயினால் சில பனை மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன.தீ பரவியதற்கான காரணம் தெரிய வரவில்லை.

மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது.


தலைமன்னாரில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.இதன் போது பொலிஸ்,இராணுவம் மற்றும் கடற் படையினரின் தீவிர முயற்சியால் நீண்ட நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.குறித்த தீயினால் சில பனை மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன.தீ பரவியதற்கான காரணம் தெரிய வரவில்லை.மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement