ஒரு மீற்றர் ஆழமான பனியில் மாணவன் பள்ளிக்கு நடந்து சென்ற நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கிர்கிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கிர்கிஸ்தானில் கொட்டும் மழை போல் பனி கொட்டிக் கொண்டுள்ளது.
இதனால் ஒரு மீற்றர் ஆழமான அளவில் வீதி முழுவதும் பனி கொட்டியுள்ளது. இந்த கொட்டும் பனிக்குள் 4 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் நடந்து பள்ளிக்குச் சென்றுள்ளான்.
கிட்டத்தட்ட மாணவனின் இடுப்பளவில் பனி மூடுமளவில் காணப்பட்டுள்ளது. எனினும் தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று பல சிரமங்களுக்கு மத்தியில் புத்தகப்பையையும் கொண்டு நடந்து சென்றுள்ளான்.
கொட்டும் பனிக்குள் மாணவன் பள்ளி சென்ற சம்பவம் அவனது கல்வி மீது அவன் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிக்காட்டுகின்றது.
மாணவன் பனிக்குள் நடந்து சென்ற காணொளி வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளதோடு அந்நாட்டு ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்தது.
காணொளியைப் பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி, குறித்த மாணவனை தனது அரண்மனைக்கு அழைத்து, அவன் கற்றுக்கொள்ளும் உறுதியைப் பாராட்டினார்.
அத்துடன் மாணவனுக்கு மடிக்கணினி, கால்பந்து மற்றும் தொலைபேசி உள்ளிட்டவற்றைப் பரிசளித்தார்.
மாணவனின் இந்த செயலும் ஜனாதிபதியின் பரிசும் மேலும் பல மாணவர்களை பள்ளிக்கு செல்லத் தூண்டுவதான செயலாக விளங்குகின்றது.
இடுப்பளவான பனியில் நடந்து சென்ற மாணவன்; கவனத்தை ஈர்த்து வைரலாகும் காணொளி ஒரு மீற்றர் ஆழமான பனியில் மாணவன் பள்ளிக்கு நடந்து சென்ற நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கிர்கிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கிர்கிஸ்தானில் கொட்டும் மழை போல் பனி கொட்டிக் கொண்டுள்ளது. இதனால் ஒரு மீற்றர் ஆழமான அளவில் வீதி முழுவதும் பனி கொட்டியுள்ளது. இந்த கொட்டும் பனிக்குள் 4 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் நடந்து பள்ளிக்குச் சென்றுள்ளான். கிட்டத்தட்ட மாணவனின் இடுப்பளவில் பனி மூடுமளவில் காணப்பட்டுள்ளது. எனினும் தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று பல சிரமங்களுக்கு மத்தியில் புத்தகப்பையையும் கொண்டு நடந்து சென்றுள்ளான். கொட்டும் பனிக்குள் மாணவன் பள்ளி சென்ற சம்பவம் அவனது கல்வி மீது அவன் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிக்காட்டுகின்றது.மாணவன் பனிக்குள் நடந்து சென்ற காணொளி வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளதோடு அந்நாட்டு ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்தது. காணொளியைப் பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி, குறித்த மாணவனை தனது அரண்மனைக்கு அழைத்து, அவன் கற்றுக்கொள்ளும் உறுதியைப் பாராட்டினார். அத்துடன் மாணவனுக்கு மடிக்கணினி, கால்பந்து மற்றும் தொலைபேசி உள்ளிட்டவற்றைப் பரிசளித்தார்.மாணவனின் இந்த செயலும் ஜனாதிபதியின் பரிசும் மேலும் பல மாணவர்களை பள்ளிக்கு செல்லத் தூண்டுவதான செயலாக விளங்குகின்றது.