• Sep 04 2026

கடல் பகுதிகளில் பலத்த காற்று: ‘அம்பர்’ எச்சரிக்கை

Chithra / Sep 3rd 2026, 3:45 pm
image


நாட்டின் சில கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலைமை தொடர்பில் வானிலை ஆய்வு மையம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.


வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக குறித்த கடல் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


எனவே, கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் கடலுக்குச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வானிலை நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடல் பகுதிகளில் பலத்த காற்று: ‘அம்பர்’ எச்சரிக்கை நாட்டின் சில கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலைமை தொடர்பில் வானிலை ஆய்வு மையம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த கடல் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் கடலுக்குச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வானிலை நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement