• May 17 2026

நாட்டின் சில இடங்களில் வேகமாக காற்று வீசக்கூடும்

Aathira / Sep 21st 2025, 7:45 am
image

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,

திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்தில் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.

அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி காணப்படும்.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழைகள் மற்றும் அதிகமாக வீசக்கூடிய காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டின் சில இடங்களில் வேகமாக காற்று வீசக்கூடும் மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்தில் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும். அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி காணப்படும்.வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழைகள் மற்றும் அதிகமாக வீசக்கூடிய காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement