தொடரும் கடல் கொள்ளை மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று சாய்ந்தமருது மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் தங்களது படகுகளுடன் பிரதான கடற்கரை வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
“எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்”, “சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள்” போன்ற கோசங்களை எழுப்பி மீனவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், பலமுறை அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிலையான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் கொள்ளையை உடன் நிறுத்து சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதிமறியல் தொடரும் கடல் கொள்ளை மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று சாய்ந்தமருது மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் தங்களது படகுகளுடன் பிரதான கடற்கரை வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.“எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்”, “சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள்” போன்ற கோசங்களை எழுப்பி மீனவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.மேலும், பலமுறை அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிலையான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.