முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன இ.போ.ச அதிகாரிகளால் அதிரடியாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த இ.போ.ச பேருந்து, முல்லைத்தீவை சென்றடைந்துள்ளது. பின்னர், மீண்டும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 10.30 மணியளவில் வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இப்பயணத்தின் போது, பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனுக்கு தொலைபேசி ஊடாகப் பயணி ஒருவரால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய அதிகாரிகள் மற்றும் வவுனியா தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேருந்தினை மறித்துச் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது, தான் மதுபானம் அருந்தியிருந்ததை நடத்துநர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இ.போ.ச வவுனியா சாலை அதிகாரிகள், நடத்துநரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் ஆகியவற்றை உடனடியாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்துடன், பேருந்தின் பயணத்தைத் தொடர்வதற்கும் பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டும், உடனடியாகப் பிறிதொரு நடத்துநர் அந்தப் பேருந்தின் கடமைக்காகப் பணிக்கமர்த்தப்பட்டார். இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் - வவுனியாவில் பரபரப்பு முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன இ.போ.ச அதிகாரிகளால் அதிரடியாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த இ.போ.ச பேருந்து, முல்லைத்தீவை சென்றடைந்துள்ளது. பின்னர், மீண்டும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 10.30 மணியளவில் வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.இப்பயணத்தின் போது, பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனுக்கு தொலைபேசி ஊடாகப் பயணி ஒருவரால் முறைப்பாடு வழங்கப்பட்டது.கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய அதிகாரிகள் மற்றும் வவுனியா தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேருந்தினை மறித்துச் சோதனை நடத்தினர்.அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது, தான் மதுபானம் அருந்தியிருந்ததை நடத்துநர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இ.போ.ச வவுனியா சாலை அதிகாரிகள், நடத்துநரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் ஆகியவற்றை உடனடியாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.அத்துடன், பேருந்தின் பயணத்தைத் தொடர்வதற்கும் பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டும், உடனடியாகப் பிறிதொரு நடத்துநர் அந்தப் பேருந்தின் கடமைக்காகப் பணிக்கமர்த்தப்பட்டார். இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.