• Jun 19 2026

சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில் 14 லட்சம் ரூபா பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

Ziya / Jun 19th 2026, 1:37 pm
image

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 19 கிராமங்களில் இயங்கி வரும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில் சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (18.06.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.


கணபதிப்பிள்ளை குலசிங்கம் மற்றும் குலசிங்கம் சரஸ்வதி ஆகியோரின் நினைவாக அவர்களின் பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பின் மூலம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, ஒவ்வொரு சிறுவர் கழகத்திற்கும் சுமார் 77 ஆயிரம் ரூபா பெறுமதியிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மொத்தமாக 14 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் 19 சிறுவர் கழகங்களுக்கு கையளிக்கப்பட்டன.


சிறுவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறும். 


தலைமைத்துவம், கழிவு முகாமைத்துவம் மற்றும் நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் , சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு  சுகாதார வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச. கிருசாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. குணசேகர, குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி நுவாண் மற்றும் உதவி பிரதேச செயலாளர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக தொண்டர்கள் , சிறுவர்கள் உள்ளிட்ட 300 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில் 14 லட்சம் ரூபா பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 19 கிராமங்களில் இயங்கி வரும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில் சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (18.06.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.கணபதிப்பிள்ளை குலசிங்கம் மற்றும் குலசிங்கம் சரஸ்வதி ஆகியோரின் நினைவாக அவர்களின் பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பின் மூலம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, ஒவ்வொரு சிறுவர் கழகத்திற்கும் சுமார் 77 ஆயிரம் ரூபா பெறுமதியிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மொத்தமாக 14 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் 19 சிறுவர் கழகங்களுக்கு கையளிக்கப்பட்டன.சிறுவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறும். தலைமைத்துவம், கழிவு முகாமைத்துவம் மற்றும் நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் , சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு  சுகாதார வைத்திய அதிகாரி ப.சத்தியரூபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச. கிருசாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. குணசேகர, குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி நுவாண் மற்றும் உதவி பிரதேச செயலாளர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக தொண்டர்கள் , சிறுவர்கள் உள்ளிட்ட 300 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement