• Sep 15 2026

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையில் சிறப்பு நிகழ்வு

dorin / Sep 14th 2026, 12:48 pm
image

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இன்று மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் முதலாவது நாள் வைபவம் மஸ்கெலியா டீ.எம்.டீ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு (14.09.2026 )இன்று காலை 10 மணிக்கு அதிதிகள் வரவேற்பு தேசிய மாகாண மற்றும் பிரதேச சபையின் கொடி ஏற்றிவைத்து.

அதன் பின்னர் அதிதிகள் மண்டபத்திற்கு அழைத்து வர பட்டனர் மங்கள விளக்கு ஏற்றி வைக்க பட்டு வரவேற்பு நடனத்தை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் மாணவியர்கள் மேற்கொண்டனர்.

தொடர்ந்து மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் மஸ்கெலியா சுகாதார அதிகாரி எம் எச் எம் ஈர்சாட் அவர்கள் உரையாற்றினார்கள்.

மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தனது உரையில் இன்று முதல் 19 ம் திகதி வரை மஸ்கெலியா பிரதேச சபை மேற் கொள்ள விருக்கும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் எடுத்து கூறினார்.

எதிர் வரும் 16 ம் திகதி மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் வகையில் மருத்துவ முகாம் ஒன்று மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய மண்டபத்தில் இடம் பெற உள்ளது அதனை யொட்டி இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளலாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறும் என மஸ்கெலியா பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்து 19 ம் திகதி வரை நிகழ்வுகள் இடம் பெற்று வரும் எனவும் இறுதி நாளில் சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெறும் என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையில் சிறப்பு நிகழ்வு உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இன்று மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் முதலாவது நாள் வைபவம் மஸ்கெலியா டீ.எம்.டீ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வு (14.09.2026 )இன்று காலை 10 மணிக்கு அதிதிகள் வரவேற்பு தேசிய மாகாண மற்றும் பிரதேச சபையின் கொடி ஏற்றிவைத்து.அதன் பின்னர் அதிதிகள் மண்டபத்திற்கு அழைத்து வர பட்டனர் மங்கள விளக்கு ஏற்றி வைக்க பட்டு வரவேற்பு நடனத்தை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் மாணவியர்கள் மேற்கொண்டனர்.தொடர்ந்து மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் மஸ்கெலியா சுகாதார அதிகாரி எம் எச் எம் ஈர்சாட் அவர்கள் உரையாற்றினார்கள்.மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தனது உரையில் இன்று முதல் 19 ம் திகதி வரை மஸ்கெலியா பிரதேச சபை மேற் கொள்ள விருக்கும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் எடுத்து கூறினார்.எதிர் வரும் 16 ம் திகதி மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் வகையில் மருத்துவ முகாம் ஒன்று மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய மண்டபத்தில் இடம் பெற உள்ளது அதனை யொட்டி இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளலாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறும் என மஸ்கெலியா பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரி தெரிவித்தார்.தொடர்ந்து 19 ம் திகதி வரை நிகழ்வுகள் இடம் பெற்று வரும் எனவும் இறுதி நாளில் சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெறும் என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement