மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் கனிம வளங்கள் மற்றும் வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று (11) மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் வன வளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 48 மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வு மற்றும் பிரதேச செயலகங்களுக்கும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையிலான அதிகார வரம்புகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், மணல், மண் மற்றும் கல் அகழ்வுக்கான அனுமதிகளை முறையானதும் விஞ்ஞானபூர்வமானதுமான நடைமுறையின் கீழ் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, அண்மையில் மன்னார் மாவட்டத்தின் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 1,302 கன மீற்றர் மணலுக்கு வரி அறவிடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ளாங்குளம் பகுதியில் காணப்படும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட மாவட்டத்தின் கனிம வளங்கள் மற்றும் வன வளங்கள் சார்ந்த பல்வேறு விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று (11) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சருடன் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்கள், நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் பதவி நிலை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, மாவட்டத்தில் நிலவும் அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில் நிலவும் அதிகாரிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பிலும், அதன் மூலம் பிராந்திய மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இயற்கை வளங்களை அதிகபட்ச பயனுள்ள வகையில் பயன்படுத்துவது, கழிவு முகாமைத்துவத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் மாவட்டத்தின் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மாவட்டத்தில் நிலவும் அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், அவர்களுக்கு தேவையான வாகன வசதிகளை வழங்கவும், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான இயந்திர உபகரணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறுபோக சாகுபடியின்போது விவசாயத்திற்கு போதியளவு நீர் கிடைக்காத நிலை காணப்படுவதால், பயறு, சோளம் உள்ளிட்ட மாற்றுப் பயிர்ச் செய்கைகளில் கவனம் செலுத்துவதுடன், தரிசு நிலங்களை சாகுபடிக்கு பயன்படுத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
போரினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இதன்போது தெரிவித்தார்.
மன்னாரின் கனிம வளம், வனப்பகுதி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் கனிம வளங்கள் மற்றும் வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று (11) மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் வன வளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 48 மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வு மற்றும் பிரதேச செயலகங்களுக்கும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையிலான அதிகார வரம்புகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.மேலும், மணல், மண் மற்றும் கல் அகழ்வுக்கான அனுமதிகளை முறையானதும் விஞ்ஞானபூர்வமானதுமான நடைமுறையின் கீழ் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.அதேவேளை, அண்மையில் மன்னார் மாவட்டத்தின் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 1,302 கன மீற்றர் மணலுக்கு வரி அறவிடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.வெள்ளாங்குளம் பகுதியில் காணப்படும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட மாவட்டத்தின் கனிம வளங்கள் மற்றும் வன வளங்கள் சார்ந்த பல்வேறு விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.இதேவேளை மன்னார் மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று (11) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.அமைச்சருடன் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்கள், நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் பதவி நிலை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.இதன்போது, மாவட்டத்தில் நிலவும் அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில் நிலவும் அதிகாரிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.அத்துடன், மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பிலும், அதன் மூலம் பிராந்திய மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.மேலும், மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இயற்கை வளங்களை அதிகபட்ச பயனுள்ள வகையில் பயன்படுத்துவது, கழிவு முகாமைத்துவத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் மாவட்டத்தின் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.மாவட்டத்தில் நிலவும் அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், அவர்களுக்கு தேவையான வாகன வசதிகளை வழங்கவும், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான இயந்திர உபகரணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.சிறுபோக சாகுபடியின்போது விவசாயத்திற்கு போதியளவு நீர் கிடைக்காத நிலை காணப்படுவதால், பயறு, சோளம் உள்ளிட்ட மாற்றுப் பயிர்ச் செய்கைகளில் கவனம் செலுத்துவதுடன், தரிசு நிலங்களை சாகுபடிக்கு பயன்படுத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.போரினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இதன்போது தெரிவித்தார்.