• Sep 15 2026

'எங்களை அழித்தவர்களுடன் ஒரே மேடையில் கூத்தடிக்கும் சிலர்' – சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு

Chithra / Sep 14th 2026, 1:04 pm
image


எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார். 


கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று (14) பிற்பகல் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.


குறித்த கலந்துரையாடலில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ச. சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.


இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், 


மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.


இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகின்றது. இதன்போது குறித்த திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது ஆதரவு இல்லை.


அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயது என்றால் அதில் பிரச்சினை இல்லை. ஆனால் நீதிபதிகளின் வயதை மட்டும் அதிகரிப்பதன் ஊடாக, தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.


இதனால் பாதிக்கப்படப் போவது எதிர்க்கட்சியினராகிய நாங்கள்தான். நாங்கள் நாட்டின் ஆளுங்கட்சி அல்ல. ஆனால் பிரதேச சபைகளில் மக்கள் எங்களிடம் பொறுப்பை வழங்கியுள்ளனர். அந்த பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்ல முடியாது.


தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின் அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால் பின்னர் அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.


எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்.


இவ்வாறான ஒரு நிலைமையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

'எங்களை அழித்தவர்களுடன் ஒரே மேடையில் கூத்தடிக்கும் சிலர்' – சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார். கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று (14) பிற்பகல் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ச. சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகின்றது. இதன்போது குறித்த திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது ஆதரவு இல்லை.அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயது என்றால் அதில் பிரச்சினை இல்லை. ஆனால் நீதிபதிகளின் வயதை மட்டும் அதிகரிப்பதன் ஊடாக, தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.இதனால் பாதிக்கப்படப் போவது எதிர்க்கட்சியினராகிய நாங்கள்தான். நாங்கள் நாட்டின் ஆளுங்கட்சி அல்ல. ஆனால் பிரதேச சபைகளில் மக்கள் எங்களிடம் பொறுப்பை வழங்கியுள்ளனர். அந்த பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்ல முடியாது.தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின் அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால் பின்னர் அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்.இவ்வாறான ஒரு நிலைமையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement