இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நேற்று (20) வரை நாட்டில் 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்துகளில் 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரிய விபத்துகளில் 4,556 பேரும், சிறிய விபத்துகளில் 7,295 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துகளால் 3,232 சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 576 பேர் பாதசாரிகள், 617 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள், 122 பேர் பின்னிருக்கை பயணிகள், 119 பேர் மிதிவண்டி சாரதிகள், 139 பேர் சாரதிகள் மற்றும் 173 பேர் பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு சாரதிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் – 1,749 பேர் உயிரிழப்பு இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நேற்று (20) வரை நாட்டில் 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.குறித்த விபத்துகளில் 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பாரிய விபத்துகளில் 4,556 பேரும், சிறிய விபத்துகளில் 7,295 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துகளால் 3,232 சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 576 பேர் பாதசாரிகள், 617 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள், 122 பேர் பின்னிருக்கை பயணிகள், 119 பேர் மிதிவண்டி சாரதிகள், 139 பேர் சாரதிகள் மற்றும் 173 பேர் பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு சாரதிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.