• Jul 26 2026

எக்ஸ்-ரே சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த கடத்தல்! 110 மில்லியன் ரூபாய் போதைப்பொருள் பறிமுதல்

Aathira / Jul 25th 2026, 8:00 am
image

சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2.198 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் விவசாயப் பொறியியலாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கட்டார் எயார்வேஸின் QR654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

அவர் கையடக்கப் பையாகக் கொண்டு வந்த பயணப் பையை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது எந்தவித சந்தேகத்திற்குரிய பொருட்களும் கண்டறியப்படவில்லை. 

ஆனால், அவருக்குச் சொந்தமான மற்றொரு பயணப் பை அந்த விமானத்தில் வராததால், வழக்கமான வருகை நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் தாமதமாக இலங்கைக்கு வந்த அந்தப் பயணப் பையைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு சென்றுள்ளார்.

பயணப் பையை விடுவிப்பதற்கு முன்பு, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அதனை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், பயணப் பைக்குள் இருந்த இரண்டு கோப்பு தாங்கிகளின் உள்ளே மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொக்கைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும், அதன் சந்தைப் பெறுமதி சுமார் 109.9 மில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கம் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-ரே சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த கடத்தல் 110 மில்லியன் ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2.198 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் விவசாயப் பொறியியலாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கட்டார் எயார்வேஸின் QR654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.அவர் கையடக்கப் பையாகக் கொண்டு வந்த பயணப் பையை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது எந்தவித சந்தேகத்திற்குரிய பொருட்களும் கண்டறியப்படவில்லை. ஆனால், அவருக்குச் சொந்தமான மற்றொரு பயணப் பை அந்த விமானத்தில் வராததால், வழக்கமான வருகை நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.பின்னர் தாமதமாக இலங்கைக்கு வந்த அந்தப் பயணப் பையைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு சென்றுள்ளார்.பயணப் பையை விடுவிப்பதற்கு முன்பு, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அதனை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், பயணப் பைக்குள் இருந்த இரண்டு கோப்பு தாங்கிகளின் உள்ளே மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொக்கைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும், அதன் சந்தைப் பெறுமதி சுமார் 109.9 மில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கம் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement