பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருவதால், சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளூர் இழுவைமடி படகுகளின் பயன்பாட்டினால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்று (29) தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மீனவர் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து, உள்ளூர் இழுவைமடி படகுகளினால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றமை, கடலட்டை வளர்ப்பினால் சிறு மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டதாக தெரிவித்தார்.
கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் தாம் எடுத்துரைத்தபோது, உள்ளூர் இழுவைமடி படகுகள் இறால் பிடித் தொழிலில் ஈடுபடுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தாம் கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடிய நிலையில், கடல் வளங்களை அழிக்கும் தொழிலை ஆதரிக்கும் வகையில் அந்த பதில் அமைந்திருந்ததாகவும் வர்ணகுலசிங்கம் குற்றஞ்சாட்டினார்.
தென்பகுதியில் வத்தளை குண்டு பகுதியில் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர், மீனவர்கள் குறைந்தளவு மண்ணெண்ணெய் செலவில் அதிக வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று வடக்கிலும் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலுக்கு உரிய முறையில் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மணல்காடு முதல் முல்லைத்தீவு நாயாறு வரையான கடற்பரப்பில் வலைகளைப் பயன்படுத்தியே இறால் பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கில் பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வளர்ப்புப் பண்ணைகளில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட வசதி படைத்த பெரும் முதலாளிகள் ஈடுபட்டு வருவதாகவும் வர்ணகுலசிங்கம் குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாக மீன்கள் பெருகும் இடங்கள் அழிக்கப்பட்டு, சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் இழுவைமடி படகுகளின் செயற்பாடுகளாலும் கடலில் உள்ள மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடவடிக்கையிலும் பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு – வடக்கு மீனவ பிரதிநிதி குற்றச்சாட்டு பெரும் முதலாளிகள் கடலட்டை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருவதால், சிறு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அத்துடன், உள்ளூர் இழுவைமடி படகுகளின் பயன்பாட்டினால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பில் இன்று (29) தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மீனவர் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து, உள்ளூர் இழுவைமடி படகுகளினால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றமை, கடலட்டை வளர்ப்பினால் சிறு மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டதாக தெரிவித்தார்.கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் தாம் எடுத்துரைத்தபோது, உள்ளூர் இழுவைமடி படகுகள் இறால் பிடித் தொழிலில் ஈடுபடுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தாம் கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடிய நிலையில், கடல் வளங்களை அழிக்கும் தொழிலை ஆதரிக்கும் வகையில் அந்த பதில் அமைந்திருந்ததாகவும் வர்ணகுலசிங்கம் குற்றஞ்சாட்டினார்.தென்பகுதியில் வத்தளை குண்டு பகுதியில் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர், மீனவர்கள் குறைந்தளவு மண்ணெண்ணெய் செலவில் அதிக வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேபோன்று வடக்கிலும் உள்ளூர் இழுவைமடி படகுத் தொழிலுக்கு உரிய முறையில் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.மணல்காடு முதல் முல்லைத்தீவு நாயாறு வரையான கடற்பரப்பில் வலைகளைப் பயன்படுத்தியே இறால் பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, வடக்கில் பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வளர்ப்புப் பண்ணைகளில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட வசதி படைத்த பெரும் முதலாளிகள் ஈடுபட்டு வருவதாகவும் வர்ணகுலசிங்கம் குற்றஞ்சாட்டினார்.இதன் காரணமாக மீன்கள் பெருகும் இடங்கள் அழிக்கப்பட்டு, சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.உள்ளூர் இழுவைமடி படகுகளின் செயற்பாடுகளாலும் கடலில் உள்ள மீன் பெருக்கிடங்கள் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடவடிக்கையிலும் பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.