• Jun 21 2026

ஏழாலை பெரியதம்பிரான் ஆலய குளக்கரைகளில் சிரமதானம் முன்னெடுப்பு!

shanu / Jun 20th 2026, 11:23 pm
image

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட ஏழாலை மத்தியில் அமைந்துள்ள பெரியதம்பிரான் ஆலயக் குளத்தை தூர்வாருவதற்கான முயற்சியின் முதற்கட்டமாக அதன் அணைக்கட்டுகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள பற்றைகள் குப்பைகளை அகற்றும் சிரமதான நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை 20.06.2026 காலை 8 மணி தொடக்கம் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டன.


வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் வட்டமும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரும் இணைந்து முன்னெடுத்த மேற்படி சிரமதான முயற்சியில் கிராம மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 


வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ந. சிறீஸ்கந்தராஜா, வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தி. பிரகாஷ், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கு. டெனிஸ் கமல்ராஜ் மற்றும் லகிந்தன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஊழியர்கள், கமக்காரர் அமைப்பினர், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஆலய அறங்காவலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் குளத்தை தூர்வாருவதற்கான முயற்சிகளில் கிராம மக்களையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலான உரையாடலும் இடம்பெற்றது.

ஏழாலை பெரியதம்பிரான் ஆலய குளக்கரைகளில் சிரமதானம் முன்னெடுப்பு யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட ஏழாலை மத்தியில் அமைந்துள்ள பெரியதம்பிரான் ஆலயக் குளத்தை தூர்வாருவதற்கான முயற்சியின் முதற்கட்டமாக அதன் அணைக்கட்டுகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள பற்றைகள் குப்பைகளை அகற்றும் சிரமதான நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை 20.06.2026 காலை 8 மணி தொடக்கம் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டன.வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் வட்டமும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரும் இணைந்து முன்னெடுத்த மேற்படி சிரமதான முயற்சியில் கிராம மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ந. சிறீஸ்கந்தராஜா, வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தி. பிரகாஷ், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கு. டெனிஸ் கமல்ராஜ் மற்றும் லகிந்தன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஊழியர்கள், கமக்காரர் அமைப்பினர், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஆலய அறங்காவலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் குளத்தை தூர்வாருவதற்கான முயற்சிகளில் கிராம மக்களையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலான உரையாடலும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement