• May 20 2026

யாழில் தஞ்சமடைந்த துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபர்கள் கைது!

shanu / Nov 8th 2025, 6:12 pm
image


கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூட்டினை நடத்தியjதாக சந்தேகிக்கப்படும்   மூவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


குறித்த  துப்பாக்கி சூட்டினை நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும்  மூவர்  யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில்  தங்கியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்தது. 


அதனையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.


கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண் ,பெண்  உட்பட மூவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 


விசாரணைகளுக்காக சந்தேநபர்களை அழைத்துச்செல்ல கொட்டாஞ்சேனை பொலிஸார் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தஞ்சமடைந்த துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபர்கள் கைது கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூட்டினை நடத்தியjதாக சந்தேகிக்கப்படும்   மூவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குறித்த  துப்பாக்கி சூட்டினை நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும்  மூவர்  யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில்  தங்கியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்தது. அதனையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண் ,பெண்  உட்பட மூவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளுக்காக சந்தேநபர்களை அழைத்துச்செல்ல கொட்டாஞ்சேனை பொலிஸார் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement