• Sep 30 2026

மாணவியை ஆய்வுகூடத்திற்கு அழைத்து ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல் - தலவாக்கலையில் பரபரப்பு

Chithra / Sep 29th 2026, 1:21 pm
image


தலவாக்கலை நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரை விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு அழைத்து, ஆசிரியர் நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


குறித்த ஆசிரியர் மாணவியை விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு அழைத்து, தகாத காணொளிகளைக் காண்பித்து தவறான முறையில் நடந்துகொண்டு அத்துமீற முயன்றுள்ளார். 


இதுதொடர்பில் மாணவி தனது பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.


அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மாணவியை ஆய்வுகூடத்திற்கு அழைத்து ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல் - தலவாக்கலையில் பரபரப்பு தலவாக்கலை நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரை விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு அழைத்து, ஆசிரியர் நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.குறித்த ஆசிரியர் மாணவியை விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு அழைத்து, தகாத காணொளிகளைக் காண்பித்து தவறான முறையில் நடந்துகொண்டு அத்துமீற முயன்றுள்ளார். இதுதொடர்பில் மாணவி தனது பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, பெற்றோருடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement