• May 17 2026

எல்லை மீறி நுழைந்த இலங்கை மீன்பிடிப் படகு -தடம் தெரியாது தீயிட்டு அழித்த சீஷெல்ஸ் கடற்படை!

Ziya / Jan 5th 2026, 9:14 am
image

சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக, இலங்கையின் ஹலாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டு கடற்படை மற்றும் கடல் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, பின்னர் எல்லை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அழிக்கப்பட்டுள்ளது.


சீஷெல்ஸ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறித்த படகை அந்நாட்டு அதிகாரிகள் கண்காணிப்பின் போது கைப்பற்றியுள்ளனர். 


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அந்நாட்டு கடல் சட்டங்களின் கீழ் எல்லை மீறல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த மீன்பிடிப் படகு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம், வெளிநாட்டு கடல் எல்லைகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சர்வதேச கடல் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது.


எல்லை மீறி நுழைந்த இலங்கை மீன்பிடிப் படகு -தடம் தெரியாது தீயிட்டு அழித்த சீஷெல்ஸ் கடற்படை சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக, இலங்கையின் ஹலாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டு கடற்படை மற்றும் கடல் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, பின்னர் எல்லை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அழிக்கப்பட்டுள்ளது.சீஷெல்ஸ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறித்த படகை அந்நாட்டு அதிகாரிகள் கண்காணிப்பின் போது கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அந்நாட்டு கடல் சட்டங்களின் கீழ் எல்லை மீறல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த மீன்பிடிப் படகு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம், வெளிநாட்டு கடல் எல்லைகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சர்வதேச கடல் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement