• May 22 2026

சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: தேரர் பிணையில் விடுதலை!

Chithra / May 22nd 2026, 3:51 pm
image

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


கம்பஹா பிரிவுப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த தேரர், இன்றையதினம் அநுராதபுரம் தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தேரருக்கு   தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 100,000 ரூபாய் ரொக்கப் பிணை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு நீதிமன்றம் உடனடியாகத் தடை விதித்துள்ளது.


பிணை நிபந்தனைகளை மீறினாலோ அல்லது வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் செல்வாக்கு செலுத்த முயன்றாலோ பிணை உத்தரவு உடனடியாக இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதவான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: தேரர் பிணையில் விடுதலை சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.கம்பஹா பிரிவுப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த தேரர், இன்றையதினம் அநுராதபுரம் தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தேரருக்கு   தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 100,000 ரூபாய் ரொக்கப் பிணை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு நீதிமன்றம் உடனடியாகத் தடை விதித்துள்ளது.பிணை நிபந்தனைகளை மீறினாலோ அல்லது வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் செல்வாக்கு செலுத்த முயன்றாலோ பிணை உத்தரவு உடனடியாக இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதவான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement