மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை ஆய்வு அறிக்கையில் இன்று
இரவு 11.00 மணி வரை அமலில் உள்ளவாறு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக மழை, பலத்த காற்று, பலத்த மின்னல் உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே காலநிலை தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கடுமையான மின்னல் தாக்கம்; 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை ஆய்வு அறிக்கையில் இன்று இரவு 11.00 மணி வரை அமலில் உள்ளவாறு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, 09 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மழை, பலத்த காற்று, பலத்த மின்னல் உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனவே காலநிலை தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.