• May 25 2026

கடுமையான மின்னல் தாக்கம் - 20 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

Chithra / May 25th 2026, 1:30 pm
image

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதன்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் மின்னல் தொடர்பான விசேட எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளன.


இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்கும் வகையில் மக்கள் அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


கடுமையான மின்னல் தாக்கம் - 20 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் மின்னல் தொடர்பான விசேட எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளன.இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்யக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்கும் வகையில் மக்கள் அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement