• Jun 05 2026

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள் - பறிபோன குழந்தையின் உயிர்

Chithra / Jun 4th 2026, 8:43 am
image


கண்டி - தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வயது குழந்தையொன்று   உயிரிழந்துள்ளார்.


தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, 

எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தினால் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதோடு, அவர்கள் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவி சிகிச்சை பெற்று வந்த உனுவின்ன பகுதியைச் சேர்ந்த  சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


காயமடைந்த சிறுமியின் தாயும், முச்சக்கரவண்டியை செலுத்திய தந்தையும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி  தலாத்துஒய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் இன்று (04) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி  ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.


ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


பேருந்து, கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


விபத்தினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள் - பறிபோன குழந்தையின் உயிர் கண்டி - தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வயது குழந்தையொன்று   உயிரிழந்துள்ளார்.தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தினால் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதோடு, அவர்கள் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவி சிகிச்சை பெற்று வந்த உனுவின்ன பகுதியைச் சேர்ந்த  சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.காயமடைந்த சிறுமியின் தாயும், முச்சக்கரவண்டியை செலுத்திய தந்தையும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி  தலாத்துஒய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளைகாலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் இன்று (04) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி  ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்து, கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.விபத்தினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement