• Apr 26 2026

மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு - இலங்கையிலும் உயரும் பொருட்களின் விலைகள்

Oil
Chithra / Mar 12th 2026, 9:52 am
image


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.


இதன்விளைவாக, இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.


இன்றைய நிலவரப்படி மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.


பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.


ஈரானினால் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு - இலங்கையிலும் உயரும் பொருட்களின் விலைகள் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.இதன்விளைவாக, இலங்கையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இன்றைய நிலவரப்படி மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.ஈரானினால் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement