மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்றின் மீது திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற சூழல் உருவானது.
மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலேயே இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த உணவகத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்தின் காரணமாக உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரின் முக்கிய வீதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதேவேளை சமீபத்தில் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இரு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தொடர் தீ விபத்து; பின்னணியில் ஏதேனும் மர்மமா சந்தேகம் கொள்ளும் மக்கள் மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்றின் மீது திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற சூழல் உருவானது. மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலேயே இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குறித்த உணவகத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.தீ விபத்தின் காரணமாக உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் முக்கிய வீதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதேவேளை சமீபத்தில் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இரு கடைகளில் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.