• Oct 01 2026

அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதிமீறல் – 2,000 பேருக்கு அபராதம்

Chithra / Sep 30th 2026, 12:58 pm
image


அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி (Seat Belt) தொடர்பான விதிகளை மீறிய 2,000-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.


வாகனங்களில் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றை பயன்படுத்தாமல் பயணித்த சுமார் 1,000 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவினரால், ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலையிலும் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகனங்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.


அதேவேளை, செயற்படும் நிலையில் உள்ள ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத எந்தவொரு வாகனமும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.


தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த சோதனை நடவடிக்கைகளின்போது, பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள் மீதும் விசேட கவனம் செலுத்தப்படும் என அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதிமீறல் – 2,000 பேருக்கு அபராதம் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி (Seat Belt) தொடர்பான விதிகளை மீறிய 2,000-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.வாகனங்களில் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றை பயன்படுத்தாமல் பயணித்த சுமார் 1,000 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவினரால், ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலையிலும் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகனங்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.அதேவேளை, செயற்படும் நிலையில் உள்ள ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத எந்தவொரு வாகனமும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த சோதனை நடவடிக்கைகளின்போது, பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள் மீதும் விசேட கவனம் செலுத்தப்படும் என அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement